சிஎஸ்கே அணியின் ஆட்டங்கள் எப்போது நடைபெறுகின்றன?

மார்ச் 31 அன்று தொடங்கும் ஐபிஎல் 2023 போட்டி மே 28 அன்று நிறைவுபெறுகிறது.

ஐபிஎல் போட்டியில் குரூப் ஏ பிரிவில் மும்பை, கேகேஆர், ராஜஸ்தான், தில்லி, லக்னெள ஆகிய அணிகளும் குரூப் பி பிரிவில் சென்னை, சன்ரைசர்ஸ், பஞ்சாப், ஆர்சிபி, குஜராத் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

அஹமதாபாத்தில் நாளை (மார்ச் 31) நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இறுதி ஆட்டமும் அஹமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

மூன்று வருடங்களுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. ஏப்ரல் 3 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே – லக்னெள அணிகள் மோதவுள்ளன. சிஎஸ்கே அணியின் ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 3, ஏப்ரல் 12, ஏப்ரல் 21, ஏப்ரல் 30, மே 6, மே 10, மே 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.

ஐபிஎல் 2023: சிஎஸ்கே அணியின் ஆட்டங்கள்

மார்ச் 31: சிஎஸ்கே vs குஜராத் ஏப்ரல் 3: சிஎஸ்கே vs லக்னெள (சென்னையில்) ஏப்ரல் 8: சிஎஸ்கே vs மும்பை ஏப்ரல் 12: சிஎஸ்கே vs ராஜஸ்தான் (சென்னையில்) ஏப்ரல் 17: சிஎஸ்கே vs ஆர்சிபி ஏப்ரல் 21: சிஎஸ்கே vs ஹைதராபாத் (சென்னையில்) ஏப்ரல் 23: சிஎஸ்கே vs கேகேஆர் ஏப்ரல் 27: சிஎஸ்கே vs ராஜஸ்தான் ஏப்ரல் 30: சிஎஸ்கே vs பஞ்சாப் (சென்னையில்) மே 4: சிஎஸ்கே vs லக்னெள மே 6: சிஎஸ்கே vs மும்பை (சென்னையில்) மே 10: சிஎஸ்கே vs தில்லி (சென்னையில்) மே 14: சிஎஸ்கே vs கேகேஆர் (சென்னையில்) மே 20: சிஎஸ்கே vs தில்லி

Source: ESPN Crickinfo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *